திண்டிவனத்தில் MFITU தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு மக்கள் சேவகன் விருது


 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் MFITU தொழிற்சங்கத்தில் சிறப்பாகப் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு மக்கள் சேவகன் விருது வழங்கும் விழா நடைபெற்றது.


திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 13.10.2026, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு MFITU மாநிலத் தலைவர் எம். சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் என். பாலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.


விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர். அன்பழகன், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் தேவதாஸ், NFITU மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் அரசு போக்குவரத்து மாநிலத் தொழிலாளர் சங்கத் தலைவர் பரசுராமன், மாநிலத் துணைச் செயலாளர் முகமது பாஷா, தேசிய மனித உதவும் கரங்கள் நிறுவனத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தொழிற்சங்கப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட நிர்வாகிகளின் சேவையைப் பாராட்டும் வகையில் மக்கள் சேவகன் விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கம், தமிழ்நாடு மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்கள் விருதுகளை வழங்கி நிர்வாகிகளைக் கௌரவித்தனர்.


நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொழிலாளர் நலன் மற்றும் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Previous Next

نموذج الاتصال