தவெகவில் இருந்து விலகவில்லை; ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் பதிவு: நாஞ்சில் சம்பத்


 சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகவில்லை என்றும், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு தனது ஆதங்கத்தின் வெளிப்பாடு என்றும் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் தவெக மீது அதிருப்தியில் இருப்பதாகவும், நடிகர் தனுஷுடன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவின.


இதுகுறித்து விளக்கம் அளித்த நாஞ்சில் சம்பத், தவெகவின் நட்சத்திரப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை என்றும், கட்சியின் பரப்புரை செயலாளராக இருந்தும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.


இதனால் ஏற்பட்ட கவலை, ஏமாற்றம் மற்றும் ஆதங்கத்தை தனது பதிவின் மூலம் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.


தனது பதிவு கட்சித் தலைமையிடம் தெரிவிக்கும் வகையிலானது என்றும் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்தார்.


மேலும், நடிகர் தனுஷுடன் இணைய இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.


அதுபோன்ற முடிவை எடுக்கப் போவதில்லை என்றும், தான் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்திலேயே இருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Previous Next

نموذج الاتصال