கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனுக்கான உச்சவரம்பு உயர்வு


 சென்னை: கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் நகைக் கடனுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.


புதிய நடைமுறையின்படி, நகைக் கடனுக்கு ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் வழங்கலாம். அதேபோல், நகையின் சந்தை மதிப்பில் அதிகபட்சம் 75 சதவீதம் வரை கடன் வழங்கும் வகையிலும் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் இடையே வட்டி விகிதத்தில் வேறுபாடு இருந்து வந்தது.


இந்த வேறுபாட்டை சரிசெய்யும் வகையில் புதிய வட்டி விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நிர்ணயிக்கும் நகைக் கடன் வட்டி விகிதம், அந்த வங்கிகளின் கிளைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டி விகிதத்தைவிட குறைந்தது 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும்.


மேலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் நகைக் கடனில் நிர்ணயிக்கப்படும் லாப வரம்பு 2.25 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய நடைமுறையின் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் பொதுமக்களுக்கு கூடுதல் கடன் வசதி கிடைக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

Previous Next

نموذج الاتصال