வள்ளலார் 204-வது அவதார தினம்: தலைவர்கள் புகழாரம்


 வடலூர்: வள்ளலாரின் 204-வது அவதார தினத்தை முன்னிட்டு வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


அதிகாலை 5 மணியளவில் சன்மார்க்க அன்பர்கள் திரண்டு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தனர். தொடர்ந்து காலை 7.30 மணியளவில் சத்திய தருமசாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.


பார்வதிபுரம் கிராம மக்கள் பழங்கள், பூமாலைகள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சத்திய ஞானசபைக்கு வந்தனர். பின்னர், புதிதாக நிறுவப்பட்ட கொடிமரத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.


விழாவைத் தொடர்ந்து சத்திய தருமசாலைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலும் 204-வது அவதார தின விழா நடைபெற்றது. அங்கும் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.


வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, இரக்கம், ஜீவகாருண்யம், சமத்துவம் உள்ளிட்ட வள்ளலாரின் கொள்கைகளை தலைவர்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளில் குறிப்பிட்டனர்.

Previous Next

نموذج الاتصال