திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம கும்பல் ஒன்று தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கும்பல், அதை அப்படியே தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்தும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் என்பதும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
