ஆரம்ப சுகாதார நிலைய மருந்து இருப்பை ‘நலம்’ செயலியில் அறிய வசதி

 

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி, மாரடைப்பு உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கான மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ‘நலம்’ செயலியில் புதிய வசதிகள் மேம்படுத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.


பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்புக்கடி சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாம்பு விஷக்கடி முறிவு மருந்து, வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவில் இருப்பதாகவும் கூறினார்.


தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி விஷ முறிவு சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளதாகவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


பாம்புக்கடி போன்ற அவசர நிலைகளில் உடனடி சிகிச்சை மிகவும் அவசியம் என்பதால், எந்த மருத்துவமனையில் பாம்புக்கடி அல்லது மாரடைப்புக்கான சிகிச்சை வசதி உள்ளது, அவசர சிகிச்சை மருந்துகள் இருப்பில் உள்ளனவா போன்ற விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் ‘நலம்’ செயலி மேம்படுத்தப்படும்.


இதன்மூலம் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் அருகிலுள்ள உரிய மருத்துவ வசதியை விரைவாக கண்டறிந்து சிகிச்சை பெற பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال