பொங்கலுக்கு வெள்ளி ஜரிகை போன்ற கரையுடன் சேலைகள்: அமைச்சர் விஜய் பாலாஜி

 

வேலூர்: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு வழங்கப்பட உள்ள சேலைகள் வெள்ளி ஜரிகை வைத்தது போன்ற கரையுடன் தயாரிக்கப்பட்டு வருவதாக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் விஜய் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


வருவாய்த் துறையிலிருந்து தலா 1.77 கோடி எண்ணிக்கையில் வேட்டி, சேலைகள் தயாரிக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1.77 கோடி வேட்டிகளும், 1.77 கோடி சேலைகளும் தயாரிக்கப்பட உள்ளன.


பெண்களுக்கு பிடிக்கும் வகையில் சேலைகளின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளி ஜரிகை வைத்தது போன்ற தோற்றத்துடன் சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் விரும்பும் வகையில் இந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.


மேலும், வேலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வரும் வழியில் ரயில்வே கேட் அமைந்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.


இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசி, அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

Previous Next

نموذج الاتصال