சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார்.
எஸ்ஐஆர் நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ. தங்கபாலு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், முன்னாள் எம்.பி. செல்லக்குமார், தேசிய செயலாளர் அறிவழகன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச் செயலாளர் எம். சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் பேசிய மாணிக்கம் தாகூர், எஸ்ஐஆர் நடவடிக்கை தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
