டேவிஸ் கோப்பை: இந்தியா – கொரியா அணிகள் இன்று மோதல்


 டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறுகிறது.


முதல் நாளில் இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ், தென் கொரியாவின் சூன்வூ குவானை எதிர்கொள்கிறார். தரவரிசையில் தட்சிணேஸ்வர் 367-வது இடத்திலும், குவான் 150-வது இடத்திலும் உள்ளனர்.


இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், தென் கொரியாவின் ஹியான் சுங்குடன் மோதுகிறார். ஹியான் சுங் தற்போது 567-வது இடத்தில் உள்ளார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு உலகத் தரவரிசையில் 19-வது இடத்தைப் பிடித்திருந்தார். சுமித் நாகல் தற்போது 236-வது இடத்தில் உள்ளார். காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறார்.


இரண்டாவது நாளில் நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி – நிக்கி பூனச்சா ஜோடி, தென் கொரியாவின் உய்சுங் பார்க் – ஜிசுங் நாம் ஜோடியை எதிர்கொள்கிறது.


நிக்கி பூனச்சா நடப்பு சீசனில் சாலஞ்சர்ஸ் தொடரில் 6 முறை பட்டம் வென்றுள்ளார். உய்சுங் பார்க் 241-வது இடத்திலும், ஜிசுங் நாம் 112-வது இடத்திலும் உள்ளனர்.


இதைத்தொடர்ந்து மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் – சூன்வூ குவான், தட்சிணேஸ்வர் சுரேஷ் – ஹியான் சுங் மோத உள்ளனர்.


இந்தியா – தென் கொரியா அணிகளுக்கு இடையிலான இந்த மோதலில் வெற்றி பெறும் அணி டேவிஸ் கோப்பையின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

Previous Next

نموذج الاتصال