வாராணசியில் என்கவுன்டர்: நக்சல் மூத்த தளபதி பிரிஜேஷ் கஞ்சு உயிரிழப்பு


 உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில், ஜார்க்கண்டை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் மூத்த தளபதி பிரிஜேஷ் கஞ்சு உயிரிழந்தார்.


இந்த என்கவுன்ட்டர் நடவடிக்கையின்போது தீவிரவாதத் தடுப்புப் படையின் துணைக் காவல் கண்காணிப்பாளர் விபின் ராய் மற்றும் தலைமைக்காவலர் நிதேந்திர கிருஷ்ணா ஆகியோர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.


எனினும், அவர்கள் அணிந்திருந்த குண்டுதுளைக்காத பாதுகாப்பு உடை காரணமாக இருவரும் உயிர் தப்பினர்.


என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரிஜேஷ் கஞ்சு மீது தீவிரவாதச் செயல்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜார்க்கண்டை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நக்சல் அமைப்பில் அவர் மூத்த தளபதியாக இருந்ததாக கூறப்படுகிறது.


இந்த என்கவுன்டர் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال