எஸ்ஐஆர் பணியில் 15% மக்கள் தொகை நீக்கம்: முன்னாள் தேர்தல் ஆணையர் புகார்


 புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதுவரை இரு கட்டங்களாக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்துள்ளது.


தற்போது மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தற்போதைய சூழலில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்திய மக்கள் தொகை ஆணையத்தால் கூட செய்ய முடியாத சாதனையை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். சுமார் 15 சதவீத மக்கள் தொகையை தேர்தல் ஆணையம் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எஸ்ஐஆர் பணி முறையாக நடைபெறவில்லை என்றே தான் கருதுவதாகவும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال