தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்


 சென்னை: விக்கிரவாண்டி உள்ளிட்ட தமிழகத்தின் 15 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு வகையான வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்களில் உயர்வு ஏற்பட்டுள்ளது.


கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் முதல் பேருந்து, லாரி மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் வரை புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


விக்கிரவாண்டி உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால், தினசரி பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் கூடுதல் செலவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஏற்கெனவே எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், சுங்கக் கட்டண உயர்வு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதற்கிடையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒப்பந்தக் காலம் நிறைவடைந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Previous Next

نموذج الاتصال