“அதிமுகவை முதலில் காப்பாற்றுங்கள்” - பழனிசாமிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

 

சென்னை: காங்கிரஸ் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்வைத்த விமர்சனத்துக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் பதிலடி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மத்தியில் பாஜகவுக்கு அடிமையாக இருந்துவிட்டு, தற்போது கொள்கை குறித்து பேசும் பழனிசாமியின் இரட்டை வேடத்தை மக்கள் நன்றாக அறிவார்கள். காங்கிரஸை விமர்சிப்பதை விட, முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளது. கொள்கை கூட்டணி என்று கூறியவர்கள் இன்று பதவிக்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் கொள்கை எங்கே உள்ளது?” என்று விமர்சித்திருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

Previous Next

نموذج الاتصال