"பலவீனமாக இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கிறேன்" - சோனம் வாங்சுக்

 


நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; 17-வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

புதுடெல்லி: நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தர் (Jantar Mantar, New Delhi) பகுதியில் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ளது.

தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், "உடலளவில் நான் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "சோனம் வாங்சுக் இதுவரை சுமார் 8.25 கிலோ உடல் எடையை இழந்துள்ளார். தொடர்ந்து தலைச்சுற்றல், கடுமையான தசை இழப்பு மற்றும் உடல் பலவீனம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையிலும், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை" என தெரிவித்தனர்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال