பெரம்பூர், சென்னை
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தனது தொகுதியான பெரம்பூருக்கு முதல் முறையாக வந்த முதல்வர் விஜயிடம், பள்ளி புத்தகப்பையின் எடையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 8-ஆம் வகுப்பு மாணவி ருத்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்தபோது, அவரை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை தெரிவிக்க மாணவி ருத்ரா விரும்பியிருந்தார். ஆனால், அவரை நேரில் சந்திக்க முடியாததால் ஏமாற்றமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ருத்ரா, "பள்ளிக்குச் செல்லும் புத்தகப்பை மிகவும் கனமாக இருக்கிறது. தினமும் அதை சுமந்து செல்வதால் முதுகுவலி ஏற்படுகிறது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புத்தகப்பையின் எடையை குறைக்கும் வகையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.