ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு 20% பாதுகாப்பு கட்டணம்: ட்ரம்ப் அறிவிப்பு

 

வாஷிங்டன்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து சரக்கு கப்பல்களுக்கும் 20 சதவீத பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானின் கடலோரப் பகுதிகளில் அமைந்திருந்த முக்கிய ராணுவ தளங்களை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாகவும், தற்போது ஈரானின் உள்பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரான் துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்லவும் அங்கிருந்து வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், "ஹார்முஸ் ஜலசந்தி தற்போது திறக்கப்பட்டுள்ளது. இனி அதன் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்யும். இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் அனைத்து சரக்கு கப்பல்களிடமும் 20 சதவீத பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சர்வதேச கப்பல் போக்குவரத்து, கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال