அமைப்பு : பன்னிரெண்டு தாமரை இதழ்கள் கொண்ட பச்சை
நிறத்துடன் கூடிய இந்தச் சக்கரத்தின் மையத்தில் அறுகோண வடிவத்தில்
பிரகாசமாக ஒளிவீசும் பொன்னிற ஜோதியைக் கொண்டது. இந்த அனாகத சக்கரம்
இதயத்தோடு தொடர்புடையதாக கூறப் படுகிறது. இந்த சக்கரமானது பஞ்சாட்சர
எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.
இடம் : இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது.
மூலக்கூறு : காற்று
ஆண் தெய்வம் : ஈசான ருத்திர சிவன்,
நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்து இரு கைகளுடனும் காணப்படுகிறார்.
திரிசூலம், தமரு உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறார். தலையில்
கங்கை நீர் செறிந்து கொண்டிருக்கிறாள்.
பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் காகினி.
ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு நிற தாமரையில் அமர்ந்து வான நீல நிற புடவை
அணிந்து நான்கு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு,
வாள், கேடயம், திரிசூலம் ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.
மிருகம் : மலையாடு
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : இதயம்
பீஜமந்திரம் : யங்
பலன்கள் : அன்பு, இரக்கம், உணர்வு, இவற்றின்
மூலம் உறவுகள் சீராகும். இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள்
உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. அருள் நிலை,
ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை. மூலாதார சக்கரத்தில் இருந்து
எழுப்பப் பட்ட குண்டலினியானது அனாகத சக்கரத்தை வந்தடையும் போது அதற்கு
“அக்கினி குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி அனாகத சக்கரம் மலர்ந்த
நிலையில், சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு, இரக்கம் போன்ற சாத்வீக
குணங்கள் மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found