அமைப்பு : பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல 
நிறத்தையுடைய அடர் நீலம் கொண்ட சக்கரமாகும். பஞ்சாட்சர எழுத்துக்களான 
"சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் 
தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இந்த 
சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன. 
அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, 
ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. 
      
        இடம் : தொண்டை, இந்த சக்தி ஆதார மையமானது நமது 
தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக 
குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு 
சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் 
தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. 
      
        மூலக்கூறு : ஆகாயம் 
      
        ஆண் தெய்வம் : பஞ்சாட்சர சிவன்,
 நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்து இந்து தலையும், நான்கு கைகளுடனும் 
காணப்படுகிறார். திரிசூலம், உடுக்கை, ஜப மாலை, அபாய முத்திரை ஆகியவற்றினை 
கைகளில் தாங்கி இருக்கிறார். 
        
        பெண் தெய்வம் :  மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் சாகிணி.
 இளம் ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு நிற தாமரையில் அமர்ந்து வான நீல நிற 
புடவை அணிந்து நான்கு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். 
மண்டையோடு, அங்குசம், புனித வேதம், ஜப மாலை ஆகியவற்றினை கைகளில் தாங்கி 
இருக்கிறாள். 
      
        மிருகம் : சாம்பல் நிற யானை. 
      
        சம்பந்தப்பட்ட உறுப்புகள் : தொண்டை, நுரையீரல் 
      
        பீஜமந்திரம் : ஹங் 
      
        பலன்கள் : சரணாகதியை வெளிக்கொணரும். மறைவான 
ஆத்மசக்தியின் பரிமாணத்தைத் திறக்கச் செய்யும். புனிதத்துவம் வளரும். 
விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் 
தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள்,
 சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும். இந்த 
சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை உருவாக்கும் அல்லது விளைவிக்கும் எண்ணங்கள்,
 உணர்வுகள் எல்லாம் சாதகனை விட்டு நீங்கிடும். இதனால் எதனையும் விருப்பு 
வெறுப்போ அல்லது பற்றுதலோ இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க 
முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து அன்பும், கருணையும் 
மிளிர்ந்தவனாகிடுவான் என்கின்றனர்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found
