தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்றார்.
சென்னை பெரம்பூரில் உள்ள தனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு விஜய் சென்றார். அங்கு தொகுதி மக்கள் நேரில் சந்தித்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
குடிநீர், சாலை, மின்விளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மேலும், தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் பலர் மனுக்களை வழங்கினர்.
பொதுமக்கள் அளித்த மனுக்களை விஜய் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடனும் விஜய் ஆலோசனை நடத்தினார்.
விஜய் பெரம்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில், தனது தொகுதி மக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
