மேட்டூரில் 3 மாதங்களாக அச்சுறுத்திய 6 வயது சிறுத்தை சிக்கியது


 சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கண்ணாமூச்சி பகுதியில் கடந்த 3 மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த 6 வயது ஆண் சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது.


மிளகாய்பொதை பகுதியில் வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது.


கடந்த 3 மாதங்களில் இந்த சிறுத்தை சுமார் 20 ஆடுகள், 2 மாட்டுக் கன்றுகள், 3 வளர்ப்பு நாய்கள் மற்றும் 15 கோழிகளை வேட்டையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால், கண்ணாமூச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அச்சமடைந்திருந்தனர்.


இந்நிலையில், வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது.


கூண்டில் சிக்கிய சிறுத்தை 6 வயது ஆண் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சிறுத்தையை வனப்பகுதியில் விடுவிப்பதற்கான உரிய அனுமதி பெறப்பட்ட பின்னர், அது பாதுகாப்பான முறையில் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال