ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கேலி செய்யும் வகையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் திரைப்படக் காட்சியை ஈரான் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரைப்படமான ‘லெஜண்ட்’ படத்தில் இடம்பெற்ற காட்சியில் நடிகர் பாலகிருஷ்ணா எதிரிகளை தாக்கும் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காட்சியுடன் டிரம்பை தொடர்புபடுத்தும் வகையில் ஈரான் தரப்பில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில் ஈரான் வெளியிட்டுள்ள திரைப்படக் காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் பாலகிருஷ்ணாவின் திரைப்படக் காட்சியை பயன்படுத்தி அமெரிக்க அதிபரை கேலி செய்யும் வகையில் ஈரான் மேற்கொண்டுள்ள இந்தச் சமூக வலைதளப் பதிவு இணையத்தில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படக் காட்சியை அரசியல் மற்றும் சர்வதேச விவகாரத்தில் பயன்படுத்தியிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
