நந்திகிராம் இடைத்தேர்தலில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் தாயார் போட்டி


 கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் சுவேந்து அதிகாரியின் முன்னாள் தனி உதவியாளர் சந்திரநாத் ராத்தின் தாயார் ஹசிராணி ராத் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, மே 6-ம் தேதி சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார்.


அவர் பதவியேற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது தனி உதவியாளராக இருந்த சந்திரநாத் ராத் சுட்டுக் கொல்லப்பட்டார்.


கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.


இதையடுத்து நந்திகிராம் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சந்திரநாத் ராத்தின் தாயார் ஹசிராணி ராத் நந்திகிராம் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஹசிராணி ராத் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, அவருக்கு ஆதரவாக முதல்வர் சுவேந்து அதிகாரி பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நந்திகிராம் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல், சுவேந்து அதிகாரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெறுகிறது.

Previous Next

نموذج الاتصال