‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ விவகாரம்: கூட்டணியில் இருந்து விலகுமா காங்கிரஸ்?


 சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ என்ற கருத்து தொடர்பாக அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், முதல்வர் விஜய்யை எதிர்கால பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக நிர்வாகிகள் பேசத் தொடங்கியதாக கூறப்படுகிறது.


இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத நிலை ஏற்பட்டால், தவெக கூட்டணியில் இருந்து விலகி தமிழகத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


இந்த சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி. சந்தித்தனர்.


அப்போது, ‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ என்ற பேச்சு தேசிய அளவில் கூட்டணிக்குள் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என்பதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து கட்சியினரிடம் பேசுவதாக முதல்வர் விஜய் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous Next

نموذج الاتصال