திருப்பதி பிரம்மோற்சவம்: 8-ம் நாள் தேரோட்டத்தில் திரண்ட பக்தர்கள்


 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.


அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருமாட வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.


தேரோட்டத்தை முன்னிட்டு திருமலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, தேரோட்டத்திலும் பங்கேற்றனர்.


பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை கோயில் வளாகம் மற்றும் நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் மற்றும் காவல் துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள், தேரின் வடத்தை இழுத்து ஏழுமலையானை வழிபட்டனர்.

Previous Next

نموذج الاتصال