சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேரை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெக கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி. ராமலிங்கம், எம். ஆனந்தன், கடம்பூர் ராஜூ, கே.டி. பச்சைமால், வெல்லமண்டி நடராஜன், என்.ஆர். சிவபதி, வைகைச் செல்வன், எஸ். வளர்மதி ஆகியோர் தவெக துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, சந்தீப் ஆனந்த், கே.ஜி. முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூர் கண்ணன், வி.சி.ஆர். குமரன் ஆகியோரும் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மடத்துக்குளம் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக சி. மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
