பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு

சென்னை: பணியின்போது சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை தொடர்பாக 59 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்.


பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


போதைப் பொருள் பயன்பாட்டை திறம்பட ஒழிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில், தலா ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.


காவல் துறையை நவீனப்படுத்த பாதுகாப்பு, புலனாய்வு, விசாரணை உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்க ரூ.212 கோடி ஒதுக்கப்படும். காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்த ரூ.200 கோடியில் புதிய வாகனங்களும் வாங்கப்பட உள்ளன.


ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. காவலர் குடியிருப்புகளில் கழிவுநீர் மற்றும் வடிகால் அமைப்புகளை மேம்படுத்த ரூ.36 கோடி ஒதுக்கப்படும்.


வண்டலூர் அருகே உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் ரூ.23 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் அமைக்கப்படும்.


சேலம் மற்றும் விழுப்புரம் தடய அறிவியல் ஆய்வகங்களில் ரூ.14 கோடியில் மரபணு ஆய்வுப் பிரிவுகள் அமைக்கப்படும்.

 

Previous Next

نموذج الاتصال