பரந்தூர் ஏகனாபுரத்தில் புதிய சமூக நலக்கூடம் கட்டப்படும்


 சென்னை: பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் புதிய சமூக நலக்கூடம் கட்டித் தரப்படும் என சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்தார்.


சட்டப்பேரவையில் சமூகநீதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் வன்னி அரசு பேசினார்.


எஸ்சி மற்றும் எஸ்டி மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் சமூக நலக்கூடங்கள், பள்ளிகள், விடுதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


அந்தக் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, தேவையின் அடிப்படையில் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.


பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, திட்டத்துக்கு எதிராக மக்களின் உரிமைக்காக போராடிய போராட்டக் குழுவினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


இந்தச் சந்திப்பின்போது, ஏகனாபுரத்தில் சமூக நலக்கூடம் கட்டித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏகனாபுரம் பகுதியில் புதிய சமூக நலக்கூடம் கட்டித் தரப்படும் என அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

Previous Next

نموذج الاتصال