விருதுநகர்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தும் திட்டத்தை, முதல்வர் விஜய் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்தின் பெயர் ‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றப்பட்டது. மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.268 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
விருதுநகரில் முன்னாள் முதல்வர் காமராசர் படித்த கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் இந்தத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தென் மாவட்டத்துக்கு விஜய் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைய உள்ளது.
