சென்னை: தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தாக்கல் செய்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களுக்கு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி. சேகர் மற்றும் அந்தத் தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
அதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் வாக்காளர் சிவராஜ் ஆகியோர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் விசாரித்தார். தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு, வழக்கு தொடர்ந்துள்ள திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்குகளின் விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
