"என் வாழ்நாளில் அன்புமணியை தலைவராக ஏற்க மாட்டேன்" - பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்

 

சேலம்: பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், அன்புமணி ராமதாஸை தாம் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், கட்சியின் எதிர்காலம் குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் வாழ்நாளில் அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். வன்னியர் மக்களின் ஆதரவை வைத்து அரசியல் நடத்தி வரும் அன்புமணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


மேலும், “எங்களுக்கு யாரிடமும் தனிப்பட்ட விரோதம் இல்லை. அரசியல் ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். டாக்டர் ராமதாஸ் எப்போதும் எங்களுக்கு தலைவரும் வழிகாட்டியும்தான்” என்றும் கூறினார்.


அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தங்களை இணைக்க அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்த அருள், புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.


அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்கும் வாய்ப்பு தமக்கு இல்லை என்றும், இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அருள் வலியுறுத்தினார்.

Previous Next

نموذج الاتصال