Ottawa, Canada: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அரசை தொடர்புபடுத்தும் வகையில் எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று கனடாவின் Royal Canadian Mounted Police (RCMP) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் (Khalistan Tiger Force) அமைப்பின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடா குடியுரிமை பெற்று Surrey, British Columbia, Canada பகுதியில் வசித்து வந்தார். இந்திய அரசு அவரை கடந்த 2020-ஆம் ஆண்டு தீவிரவாதியாக அறிவித்திருந்தது.
இதையடுத்து, 2023 ஜூன் மாதம் Surrey, British Columbia பகுதியில் முகமூடி அணிந்த இருவரால் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்திய அரசு அந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தது. இதனால் இந்தியா - கனடா இருதரப்பு உறவில் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய கனடா அரசு, இந்தியாவுடனான இருதரப்பு உறவை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், நிஜ்ஜார் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் வட அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அவரது கூட்டாளி கோல்டி ப்ரார் ஆகியோர் இணைந்து இந்தக் கொலையை திட்டமிட்டு நடத்தியதாக அமெரிக்க தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், கனடாவின் RCMP துணை ஆணையர் லிசா மோர்லாண்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அரசை நேரடியாக தொடர்புபடுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கைது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, இந்தியா - கனடா உறவின் எதிர்கால முன்னேற்றத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
