Tiruvallur: Kannigaipair, Tiruvallur பகுதியில் செயல்பட்டு வந்த கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவன வளாகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக 'சீல்' வைத்துள்ளனர்.
Periyapalayam, Tiruvallur அருகே உள்ள Kannigaipair கிராமத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குப் பிறகு, நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 டன் இறால் மற்றும் பிற கடல் உணவுப் பொருட்கள் பாதுகாப்பான குளிர்சாதன கிடங்குகளுக்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து, தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டமாக சேமிப்பு தொட்டிகளில் இருந்த 2.9 டன் அமோனியா அகற்றப்பட்டது. பின்னர், குளிரூட்டும் அறைகள், பதப்படுத்தும் கிடங்குகள் மற்றும் குழாய்களில் தேங்கியிருந்த சுமார் 700 கிலோ அமோனியா சல்பியூரிக் அமிலம் பயன்படுத்தி செயலிழக்கச் செய்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, Tiruvallur மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவின் பேரில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் முன்னிலையில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம், தொழிலாளர் விடுதி, பதப்படுத்தும் பிரிவு மற்றும் அமோனியா சேமிப்பு பகுதி உள்ளிட்ட வளாகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக 'சீல்' வைத்தனர்.
மேலும், வளாகத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் சில வாகனங்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்த பிறகு, நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலும் முழுமையாக மூடப்பட்டு 'சீல்' வைக்கப்படும் என கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா, அலட்சியம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
