சென்னை: தமிழக அரசு மதுபான விற்பனையை அதிகரித்து வருவாய் ஈட்ட எந்தத் திட்டமும் வகுக்கவில்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ரெஸ்டோ-பார் (Resto Bar) தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இது மதுபான விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கை அல்ல என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள உரிமம் மற்றும் சேவை விதிமுறைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசின் நோக்கம் மதுவிற்பனையை ஊக்குவிப்பது அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் சட்ட விதிகளை உறுதி செய்வதே முக்கிய குறிக்கோள் என்றும் அமைச்சர் கூறினார்.
ரெஸ்டோ-பார் தொடர்பாக பரவி வரும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.