இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டாக வரலாறு படைத்தது விக்ரம்-1

 

ஸ்ரீஹரிகோட்டா: ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனத்தின் 'விக்ரம்-1' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் (Orbital) ராக்கெட்டாக புதிய வரலாறு படைத்துள்ளது.


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட 'மிஷன் ஆகமன்' (Mission Aagaman) திட்டத்தின் மூலம் விக்ரம்-1, பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் ஆறு பயணிச்சுமைகளை (Payloads) குறைந்த புவி வட்டப்பாதையில் (Low Earth Orbit) வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.


இந்த வெற்றியின் மூலம், தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2020-ஆம் ஆண்டு விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு, இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் இது முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.


இந்த வரலாற்றுச் சாதனைக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கும் அதன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال