தூத்துக்குடி: தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் மரியா வில்சன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பட்ஜெட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மக்கள் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அரசின் வளர்ச்சி திட்டங்களையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.