சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபானம் மற்றும் பீர் கொள்முதல் முறையில் தமிழக அரசு முக்கிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த 'வெயிட்டேஜ் இன்டென்ட்' (Weighted Indent) முறை ரத்து செய்யப்பட்டு, தகுதி பெற்ற அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தும் சம அளவில் கொள்முதல் ஆணைகள் வழங்கும் புதிய முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் போதிய பிராண்டுகள் கிடைக்காத நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையால் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதுடன், பொதுமக்களுக்கு அதிகளவிலான மதுபான வகைகள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.