குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய பச்சை ரோஜா சீசன் தொடக்கம்

 

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவில் அரிய வகை பச்சை ரோஜா (Green Rose) மலர்களின் பூக்கும் பருவம் தொடங்கியுள்ளது.


அரிய மரங்கள், தாவரங்கள் மற்றும் பல்வேறு வண்ண ரோஜா மலர்களுக்குப் பெயர் பெற்ற சிம்ஸ் பூங்காவில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பச்சை ரோஜா செடிகள் சிறப்பு பராமரிப்புடன் பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.


தற்போது இந்த அரிய வகை பச்சை ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், அவற்றை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக விரைவில் காட்சிப்படுத்த பூங்கா நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.


அரிய வகை மலர்களை ரசிக்க ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தரும் நிலையில், பச்சை ரோஜா மலர்களின் பூக்கும் பருவம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Next

نموذج الاتصال