திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, கோயில் இணை ஆணையர் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகளின் விசாரணைக்கு உட்பட்டார்.
பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோயில் நிர்வாகம் மற்றும் பதிவுத்துறை தொடர்பான பல்வேறு விவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிற தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பழனி கோயில் சொத்துகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து முழுமையான உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.