டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆலோசனை

 

புதுடெல்லியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் முக்கிய ஆலோசனை நடத்தினார்.


இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் குடிநீர், வறட்சி நிலை, காவிரி, மேகதாது, மகாதாயி மற்றும் கிருஷ்ணா நதிகள் தொடர்பான திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் ஒப்புதல் நிலுவையில் உள்ள முக்கிய திட்டங்கள் மற்றும் அவற்றை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.


மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நீர்வள மேலாண்மை, நிதி ஒதுக்கீடு மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் உள்கட்டமைப்பு பணிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.


மாநிலத்தின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை விரைந்து நிறைவேற்ற அனைத்து எம்.பி.க்களும் ஒருமித்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, கர்நாடகத்தின் முக்கிய திட்டங்கள் குறித்து அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்கும் வகையில் தனியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். மாநில நலன் தொடர்பான விவகாரங்களில் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

Previous Next

نموذج الاتصال