டெல்லியில் சிஜேபி பேரணி பதற்றம்: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

 

புதுடெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி (CJP) சார்பில் நடைபெற்ற ‘சன்சத் சலோ’ பேரணியின்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.


போராட்டக்காரர்கள் போலீஸ் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதனால் போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.


இந்த சம்பவத்தில் பல போராட்டக்காரர்களும் போலீஸாரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை தொடரப்போவதாக சிஜேபி தரப்பு தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال