மேகதாது விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

 

கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.


அந்தக் கடிதத்தில், காவிரி நீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக எந்த நிர்வாக அல்லது சட்ட அனுமதியும் மேகதாது திட்டத்திற்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.


மேலும், மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த பதிலில், கீழ்ப்பாயும் மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்ற கருத்து இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பதில் சட்டரீதியாகவும், காவிரி நீர் பங்கீட்டு நடைமுறைகளுக்கும் முரணானது என தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளையும், டெல்டா விவசாயிகளின் நலனையும் பாதுகாக்கும் வகையில், மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட பதிலை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்காமல் தடுக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.


காவிரி நீர் பகிர்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், கீழ்ப்பாயும் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Previous Next

نموذج الاتصال