தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரிக்கை: அவகாசம் கேட்ட மத்திய அரசு

 

புதுடெல்லி:


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.


போராட்டப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் நடத்திய பேச்சுவார்த்தையில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசின் உயர்மட்டத்தில் ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதால் பதில் அளிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


எனினும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்பது தங்களின் முக்கிய கோரிக்கையாகவே தொடரும் என்றும், அதுகுறித்து தெளிவான முடிவு அறிவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதையும், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பதையும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அடுத்தகட்ட முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال