சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை முழுமையாகப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) முதலமைச்சர் விஜயை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு முழுமையாக வழங்கவில்லை என்றும், இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் உரிமையை வலியுறுத்தி, உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர்த் தீர்ப்பாய உத்தரவுகளின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் நலனையும், குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட வேண்டும் என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.