ஃபோர்டு பிரதிநிதிகள் முதலமைச்சர் விஜயை சந்திப்பு: சென்னை ஆலை மீள்தொடக்கம் குறித்து ஆலோசனை

 

சென்னை: அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டின் உயர்மட்ட பிரதிநிதிகள், தமிழக முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, சென்னை அருகே உள்ள மறைமலைநகர் ஆலை மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


சந்திப்பின் போது, மறைமலைநகர் தொழிற்சாலையில் என்ஜின் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் பணிகள், புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகத்தில் ஃபோர்டின் நீண்டகால பங்களிப்பை வரவேற்ற முதலமைச்சர் விஜய், தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் முதலீடுகளுக்கும் மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும், நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களையும் தமிழகத்தில் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.


ஃபோர்டு நிறுவனம் மறைமலைநகர் ஆலைக்கு புதிய முதலீடுகளை மேற்கொண்டு, ஏற்றுமதிக்கான நவீன என்ஜின்களை தயாரிக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال