சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் வெங்கடராமன் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் பிரதிநிதிகளுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மீனவர்களின் கோரிக்கைகள், கடலோர வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் அன்றாட தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மீனவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.