அமர்நாத் யாத்திரை பேருந்து விபத்து: 39 பக்தர்கள் காயம்

 

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் காயமடைந்தனர்.


விபத்து ஹரிகனிவான் பகுதியில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி கீழே சரிந்து அருகிலிருந்த ஒரு வீட்டின் மீது மோதியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.


காயமடைந்த பக்தர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அனைவரின் உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


விபத்து தொடர்பாக நிர்வாகம் விசாரணை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال