தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS), 2025-26 கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பி.வி.எஸ்்சி & ஏ.எச். (BVSc & AH), உணவுத் தொழில்நுட்பம், கோழித் தொழில்நுட்பம் மற்றும் பால் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பதிவு விவரங்களை பயன்படுத்தி இணையதளத்தின் மூலம் தங்களது தரவரிசையை அறிந்துகொள்ளலாம். தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால், பல்கலைக்கழகம் அறிவித்துள்ள காலக்கெடுவிற்குள் உரிய முறையில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பி.வி.எஸ்்சி & ஏ.எச். படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா ஜி முதலிடம் பெற்றுள்ளார். தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் நடைபெற உள்ளன.
மாணவர்கள் கலந்தாய்வு அட்டவணை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகளை பல்கலைக்கழகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.