இந்தியாவில் 6 மாதங்களில் 12.71 லட்சம் சைபர் குற்றங்கள்

 

ரூ.10,178 கோடி மோசடி; தமிழகத்தில் மட்டும் ரூ.897.79 கோடி இழப்பு

புதுடெல்லி: டிஜிட்டல் அரெஸ்ட், ஆன்லைன் வங்கி மோசடி, ஹேக்கிங், சமூக வலைதள மோசடி, இணையவழி நிதி மோசடி மற்றும் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை நடைபெற்ற 6 மாத காலத்தில், நாடு முழுவதும் 12.71 லட்சம் சைபர் குற்றப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட புகார்களில் 2.86 லட்சம் புகார்கள் ஆன்லைன் வங்கி மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற மோசடிகள் தொடர்பானவையாகும்.

இந்த 6 மாதங்களில், நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் மூலம் ரூ.10,178 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும், இதே காலகட்டத்தில் 63,116 சைபர் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் ரூ.897.79 கோடி மதிப்பிலான நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், பொதுமக்கள் அறிமுகமில்லாத இணைப்புகளை (Links) திறக்காமல் இருப்பது, OTP, வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் ஏற்பட்டால் உடனடியாக தேசிய சைபர் உதவி எண் 1930 அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புகார் அளிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Previous Next

نموذج الاتصال