சென்னை:
சென்னையில் நடைப்பயிற்சிக்காக வெளியே சென்ற தொழிலதிபர் ஒருவரை காரில் கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் தகவலின்படி, அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழிலதிபரை காரில் வந்த மர்மநபர்கள் வழிமறித்து வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர். பின்னர் அவரை ஆயுதங்களால் மிரட்டி ரூ.50 லட்சம் பணம் கேட்டு, அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துள்ளனர்.
தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். கடத்தல்காரர்கள் பணத்தை பெற்றுக்கொள்ள வந்தபோது போலீஸார் அதிரடியாக செயல்பட்டு 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், ஆயுதங்கள் மற்றும் பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தக் குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.