ராய்காட் (
Raigad), மகாராஷ்டிரா (Maharashtra):
மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹெச்பிசிஎல் (HPCL) எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையிலிருந்து சுமார் 3,000 எரிவாயு சிலிண்டர்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, கனமழையால் ஆலையின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் வெள்ளநீர் நேரடியாக வளாகத்திற்குள் புகுந்தது. இதன் காரணமாக அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான எல்பிஜி சிலிண்டர்கள் பாதாளகங்கா ஆறு மற்றும் கர்பாடா ஓடையில் மிதந்தபடி சென்றன.
இந்த காட்சிகளை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, சம்பவம் வேகமாக வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜாவ்லே வெளியிட்ட எச்சரிக்கையில், "வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சில சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டிருக்கலாம். அவற்றை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது. மீட்கப்படும் சிலிண்டர்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது ஹெச்பிசிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்கப்படும் சிலிண்டர்களை அருகிலுள்ள HPCL வளாகம், அங்கீகரிக்கப்பட்ட HPCL விநியோகஸ்தர்கள், தாசில்தார் அலுவலகம் அல்லது மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் ஒப்படைக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
📲 மேலும் செய்திகளுக்கு / Follow Us:
🌐 https://www.tnpress.in/
🌐 www.tamilnews.in
🌐 www.bhayamariyaan.com
